கோவிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கிய நடிகை த்ரிஷா!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோவில் இந்த கோவிலுக்கு நடிகை த்ரிஷா இயந்திர யானையை வழங்கினார்.
அருப்புக்கோட்டையில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோவிலுக்கு நடிகை த்ரிஷா மற்றும் தனியார் அமைப்பு இணைந்து பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானையை வழங்கியுள்ளனர்.
நடிகை த்ரிஷா மற்றும் சென்னையை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் வழங்கிய யானையின் பெயர் கஜா.நிஜ யானையைப் போலவே இந்த இயந்திர யானை தோற்றம் உள்ளது. இந்த பிரம்மாண்ட கஜா யானை சுமார் 3 மீட்டர் உயரம், 800 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானையின் மதிப்பு ரூ.8 லட்சமாகும்.
கஜா’ இயந்திர யானை, சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும். தண்ணீரை பக்தர்கள் மீது பீச்சி அடிக்கும் திறனுடன், காதுகள், துதிக்கை, மற்றும் தலை ஆகியவை அசையும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா ஜூன் 27, 2025 அன்று கோயிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சி, நிஜ யானைகளுக்கு பதிலாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோயில் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. நடிகை த்ரிஷா ஒரு விலங்கு நல ஆர்வலர். இவர் இந்த இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியதன் மூலம், கோயில் விழாக்களில் உயிருள்ள யானைகளுக்கு ஏற்படும் அழுத்தத்தையும், துன்பத்தையும் தவிர்க்கலாம் என்ற தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் PFCI அமைப்புடன் இணைந்து, இந்த முயற்சியை மேற்கொண்டது, தமிழ்நாட்டில் மற்ற கோயில்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் என பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த இயந்திர யானை, கோயில் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், நவீன தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். பலரும் த்ரிஷாவின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!