நடிகை துளசி நடிப்புக்கு முழுக்கு... திரையுலகில் அதிர்ச்சி!

 
துளசி
 

 

பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை துளசி, இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு நடிப்பை முற்றிலும் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். தனது முழு வாழ்க்கையையும் ஷீரடி சாய்பாபாவுக்கு அர்ப்பணிக்க விரும்புவதாகவும், இனி ஆன்மீகப் பாதையிலேயே முழுமையாக பயணிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துளசி

1973-ம் ஆண்டு ‘அரங்கேற்றம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான துளசி, தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்பூரி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனித்த பாதையை உருவாக்கினார். ரஜினிகாந்த் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் அவரது மகளாக நடித்தது ரசிகர்கள் நினைவில் நிற்கும். ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த அவர், 2014-ல் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ மூலம் மீண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அஜித் நடிப்பில் ‘மங்காத்தா’, விஜய்யின் ‘சர்க்கார்’, விஷாலின் ‘ஆம்பள’, சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, ‘சபாநாயகன்’ உள்ளிட்ட பல படங்களில் கதாபாத்திரங்களை சிறப்பாக ஏற்று நடித்த துளசி, சமீபத்தில் வெளியான ‘ஆரோமலே’ படமே தனது திரைபயணத்தின் இறுதி படமாக அமைந்துள்ளது. ஆண்டுகள் நீண்ட நடிகை வாழ்க்கைக்கு முடிவுகட்டும் அவரது முடிவு, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை  உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!