நடிகை ஊர்வசியின் சகோதரர், நடிகர் கமல் ராய் காலமானார்... இன்று இறுதிசடங்குகள்... திரையுலகினர் இரங்கல்!
மலையாளத் திரையுலகில் தனது யதார்த்தமான நடிப்பால் தனி முத்திரை பதித்த கமல் ராய், வயது முதிர்வு தொடர்பான பாதிப்புகள் இன்றி திடீர் மாரடைப்பால் மறைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் 'புதுசா படிக்கிறேன் பாடு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கேரளாவில் மிகவும் பிரபலமான இவர், அங்குள்ள முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சாயுஜ்யம், கொல்லிலகம், மஞ்சு, கிங்கினி, கல்யாணசௌகந்திகம், வாசலம், ஷோபனம் போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்த முக்கியமான படைப்புகளாகும்.

கலைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சினி மற்றும் மறைந்த கல்பனா ஆகியோரின் சகோதரர் ஆவார். நேற்று ஜனவரி 21ம் தேதி மாலை அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு மலையாள மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை ஊர்வசி உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற திரையுலகினர் திரண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
