அடி தூள்.. ரூ.21,696 கோடி கடனை அடைத்தார் அதானி! உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

 
அதானி

இந்தியாவின் முன்னணி தொழிற்குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம், பங்குச்சந்தையில் மோசடிளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதனால், அதானி குழுமத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டது. அதிக பட்சமாக, அதானி குழுமத்துக்கு 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் குழு அமைத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், பங்குச்சந்தையில் வீழ்ச்சியை சந்தித்த போதும், அதானி குழுமம் தன் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்றக் கடன்களை, மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை முன் கூட்டியே செலுத்தவுள்ளதாக அறிவித்து, ஒவ்வொரு குழுமத்துக்கும் உரிய கடன்களை செலுத்திக் கொண்டிருக்கிறது.

நிர்மலா சீதாராமன்

அவ்வகையில் 2.65 பில்லியன் டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் 21 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையை திரும்பிச் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தம் திருப்பிச் செலுத்திய 2.65 பில்லியன் டாலர் தொகையில், அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் 500 மில்லியன் டாலர் மற்றும் அதானியின் பிற குழுமங்களின் 2.15 பில்லியன் டாலர் கடன் தொகை அடங்கும். 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, அதானி குழும கடன் விவரங்களைத் தெரிவிக்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திட்டவட்டமாக கூறினார். அதானி குழும நிறுவன பங்குகளின் விலை, கடந்த ஜனவரி மாதம் சரிந்தது. இது, பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் முதல் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்நிலையில், பட் ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு நேற்று துவங்கியது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் எம்பி தீபக் பாய்ஜ், 'அதானி குழும நிறுவனங்களின் கடன் எவ்வளவு, அதானி குழும நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கியுள்ள கடன் விவரங்களை தெரிவிக்க வேண்டும்' எனக் கேட்டார்.

கெளதம் அதானி

இதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது... எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களை தெரிவிக்க, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் தடை செய் துள்ளது. அதனால், அதானி குழும கடன் விவரங்களை தெரிவிக்கவும் முடியாது வெளியிடவும் முடியாது. என நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web