எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

 
எக்ஸ்பிரஸ் ரயில்


தெற்கு ரயில்வே  பயணிகளின் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும்  பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அந்தவகையில், தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம் - நாகர்கோவில், சென்னை சென்ட்டிரல் - திருவனந்தபுரம், சென்னை சென்டிரல் - ஆலப்புழா  ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. 

 சிறப்பு ரயில்
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில்(வண்டி எண்.20681), நாளை (வெள்ளிக்கிழமை) முதல்  ஆகஸ்டு 27ம் தேதி வரையில் கூடுதலாக 2வது வகுப்பு ஏ.சி.பெட்டி 1, 3-வது வகுப்பு ஏ.சி.பெட்டி 2, படுக்கை வசதி பெட்டி 3, பொதுப்பெட்டி 1 என மொத்தம் 7 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில்(20682), ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரையில் அதே பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. 

ரயில்

சென்னை சென்ட்டிரலில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(12695) ஆகஸ்ட் 27ம் தேதி முதல்  ஆகஸ்டு 27ம் தேதி வரையில் கூடுதலாக 2-வது வகுப்பு ஏ.சி.பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ட்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(12696)  28ம் தேதி முதல் ஆகஸ்டு 28ம் தேதி வரையில் அதே பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்டிரல்- ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(22639),  25 ம் தேதி முதல் ஆகஸ்டு 25ம் தேதி வரையில் கூடுதலாக 2வது வகுப்பு ஏ.சி.பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டு சென்டிரல்  எக்ஸ்பிரஸ் ரயிலில்(22640) ஆகஸ்ட் 26ம் தேதி முதல்  ஆகஸ்டு 26ம் தேதி வரையில் அதே பெட்டி தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களில் இணைத்து இயக்கப்பட உள்ள அனைத்து பெட்டிகளும் தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது