இன்று முதல் 3 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

 
  இன்று முதல்  3 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!


 
இந்தியா முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்துடன் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். பொதுமக்களின் தேவை மற்றும் வசதிக்காகவும்,  கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க மதுரை ரயில்வே கோட்டம் கூறியுள்ளது. இதன்படி  மதுரை கோட்டம் வழியே இயக்கப்படும் 3 ரயில்களில் இன்று மே 14 ம் தேதி புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்  கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், தூத்துக்குடி-சென்னை-தூத்துக்குடி (12694, 12693) முத்துநகா் விரைவு ரயில், திருவனந்தபுரம்- மதுரை- திருவனந்தபுரம் (16343, 16344) அமிா்தா விரைவு ரயில் ஆகியவற்றில் புதன், வியாழன், வெள்ளி (மே 14, 15, 16) ஆகிய மூன்று நாள்களில் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும்.
தாம்பரம் - நாகா்கோவில்- தாம்பரம் (22657, 22658) விரைவு ரயிலில் புதன், வியாழன் (மே 14, 15) ஆகிய 2 நாள்களிலும் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது