பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்.. இன்று முன்பதிவு தொடக்கம் - முழு அட்டவணை!
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கத் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் போத்தனூர் ஆகிய ஊர்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
1. திருநெல்வேலி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06058/06057)
திருநெல்வேலி - தாம்பரம்: ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45-க்குப் புறப்பட்டு, அதே நாள் மதியம் 2 மணிக்குத் தாம்பரம் வந்து சேரும். தாம்பரம் - திருநெல்வேலி: ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3-க்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்குத் திருநெல்வேலி செல்லும்.

2. திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில் (06154/06153)
திருநெல்வேலி -> செங்கல்பட்டு: ஜனவரி 14-ம் தேதி அதிகாலை 3.45-க்குப் புறப்பட்டு, மதியம் 1.15-க்குச் செங்கல்பட்டு வந்தடையும். செங்கல்பட்டு -> திருநெல்வேலி: ஜனவரி 14-ம் தேதி பிற்பகல் 3.30-க்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்குத் திருநெல்வேலி செல்லும்.
3. திருநெல்வேலி - தாம்பரம் (வழி: மயிலாடுதுறை, தஞ்சாவூர்) (06166/06165)
திருநெல்வேலி -> தாம்பரம்: ஜனவரி 12, 19 தேதிகளில் அதிகாலை 12.30-க்குப் புறப்பட்டு, மதியம் 1.30-க்குத் தாம்பரம் வந்து சேரும். தாம்பரம் -> திருநெல்வேலி: ஜனவரி 12, 19 தேதிகளில் மாலை 4.40-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்குத் திருநெல்வேலி செல்லும். வழித்தடம்: விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக இயங்கும்.

4. சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06151/06152)
சென்னை சென்ட்ரல் -> தூத்துக்குடி: ஜனவரி 12, 19 தேதிகளில் இரவு 11.50-க்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.15-க்குத் தூத்துக்குடி செல்லும். தூத்துக்குடி -> சென்னை சென்ட்ரல்: ஜனவரி 13, 20 தேதிகளில் மாலை 5.50-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45-க்குச் சென்னை சென்ட்ரல் வந்தடையும். வழித்தடம்: அரக்கோணம், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக இயங்கும்.
5. போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்
இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பொங்கல் சமயத்தில் (ஜன. 10, 11) தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
