தமிழகம் முழுவதும் நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!
நாளை கார்த்திகை மாத வளர்ப்பிறை சுப முகூர்த்த தினத்தையொட்டி, பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதலாக முன்பதிவு வில்லைகளை ஒதுக்கிட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் விடுத்திருப்பதாகவும், அதையொட்டி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரே சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் தற்போது வழங்கப்படும் 100 வில்லைகளுக்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 வில்லைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு, வழக்கமான 100 வில்லைகளுக்கு மேலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட உள்ளன.

இத்துடன், பொதுமக்களின் வசதிக்காக தட்கல் முன்பதிவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் தட்கல் வில்லைகளுக்கு மேலாக கூடுதலாக 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், சில அலுவலகங்களில் 4 கூடுதல் தட்கல் வில்லைகள் ஒதுக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
