நாளை மறுநாள் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!

 
சார்பதிவாளர்
 

சுபமுகூர்த்த நாட்களில் ஆவணப் பதிவுக்கு பெருமளவில் பொதுமக்கள் திரளுவதால், அவ்விதிநாள்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகளை ஒதுக்கிட அரசு வழக்கமாக ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த நிலையில், கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினமான வரும் 27.11.2025–க்கு கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் பல தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

சார்பதிவாளர் அலுவலகம்

அதனை கருத்தில் கொண்டு, ஒரே சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் தற்போது வழங்கப்படும் 100 வில்லைகளுக்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200–க்கு பதிலாக 300 வில்லைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு, வழக்கமான 100 வில்லைகளுக்கு மேலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட உள்ளன.

சொத்து பத்திரம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆவணங்கள் பதிவுத்துறை

இத்துடன், பொதுமக்களின் வசதிக்காக தட்கல் முன்பதிவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் தட்கல் வில்லைகளுக்கு மேலாக கூடுதலாக 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், சில அலுவலகங்களில் 4 கூடுதல் தட்கல் வில்லைகள் ஒதுக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!