கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய்துகொண்ட இளைஞரின் சகோதரரான 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து நேற்றைய வழக்கின் விசாரணையில், இந்த கடத்தல் வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு தொடர்பு இருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்பபடி, ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருவாலங்காடு காவல் நிலையத்தில் இன்று ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தொடர்ந்து ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தன்னை கைது செய்யும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை(ஜூன் 18) விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!