அடி தூள்.. செம வழிதடத்தில் வந்தே பாரத் ரயில்.. இனி பயண நேரம் பாதியாய் குறைஞ்சுடும்!

 
வந்தே பாரத் ரயில்

மகாராஷ்டிராவில் தற்போது 4 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.  அவற்றில் 2 ரயில்கள் கடந்த மாதம் மட்டுமே மாநிலத்திற்கு ஒப்படைக்கப்பட்டன. வந்தே பாரத் இயக்கப்படும் ஒரே மாநிலமாக மகாராஷ்டிரா மட்டுமே உள்ளது. இந்த வந்தே பாரத் மும்பையிலிருந்து கோவா வரை (மும்பை-கோவா பாதை) இயக்கப்படும். அதாவது, கோவாவுக்கு முதல் வந்தே பாரத் ரயில் கிடைக்க இருக்கிறது. இதனை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே உறுதி செய்துள்ளார்.

வந்தே பாரத் அதிவேக விரைவு ரயிலை இயக்குவது குறித்து எம்எல்ஏக்களிடம் ராவ் சாகேப் தன்வே கூறியிருப்பதாக கூறப்படுகிறாது. இந்த தகவலை மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர் நிரஞ்சன் தவ்கரே செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். எம்எல்ஏக்களுடனான உரையாடலின் போது, மத்திய அமைச்சர் தன்வே, மும்பை-ஷீரடி மற்றும் மும்பை-சோலாப்பூர் வழித்தடங்களில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் பாதையில், இந்த ரயில் மும்பை மற்றும் கோவா இடையேயும் இயக்கப்படும் என்று கூறினார்.

கோவா கடற்கரை

இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன, தற்பொழுது மும்பை-கோவா ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். ஆய்வுக்குப் பிறகு இந்த வழித்தடத்தில் புதிய ரயில் இயக்கப்படும் என்றார். தற்போது மும்பையிலிருந்து கோவாவுக்கு ரயிலில் பயணிக்க குறைந்தது 8 மணிநேரம் ஆகிறது. வந்தே பாரத் வந்ததால் மும்பைக்கும் கோவாவுக்கும் இடையிலான குறுகிய ரயில் பாதை சுமார் 412 கி.மீட்டரில் இதே வழித்தடத்தில் வந்தே பாரத் ஓடினால், இந்தப் பயண தூரம் பாதியாக குறைந்து விடும் அதாவது மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

கோவா கட்டிடம் சர்ச்

பாதை என்ன என்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது தேஜாஸ் சூப்பர்ஃபாஸ்ட் பாதை வழியாக கோவாவிற்கும் கொண்டு செல்லப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேஜஸ் ரயில் இந்தப் பயண பாதையை 8 மணி நேரத்தில் முடிக்கிறது. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் இருந்து தொடங்கும் இந்த பாதை தானே, ரத்னகிரி மற்றும் கர்மாலி வழியாக மார்கோவை சென்றடைகிறது.

தேஜஸ் ரயில் சிஎஸ்டி மற்றும் மட்கான் இடையே மொத்தம் 6 நிலையங்களில் நிற்கிறது. வந்தே பாரதத்தின் நிறுத்தங்கள் பெரிதும் குறைக்கப்படலாம். என்ன வர்ற சம்மருக்கு கோவாவுக்கு வந்தே பாரத்ல கிளம்பியாச்சா?

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web