அறிவாலயத்தில் குவிந்த நிர்வாகிகள்... இன்று முதல் திமுக விருப்ப மனு விநியோகம் - விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?!

 
திமுக

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் இன்று பிப்ரவரி 20 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெற்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர்.

திமுக

விருப்ப மனு தாக்கல் செய்வோருக்கான கட்டண விவரங்களைத் திமுக தலைமை வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் ரூ. 1,000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 25,000 செலுத்த வேண்டும்.

மகளிர் மற்றும் தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஒருவேளை வேட்பாளர் விருப்ப மனு தாக்கல் செய்த தொகுதி பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில், அவர் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் மீண்டும் திருப்பித் தரப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

ஸ்டாலின் திமுக

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், திமுக சுமார் 170 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், மீதமுள்ள 64 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்க உள்ளதால், அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் தேர்தல் ஆர்வலர்களின் கூட்டம் களைகட்ட துவங்கியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!