அதிமுக பிரமுகர் மகன் படுகொலை... பரபரக்கும் அரசியல் வட்டாரம்... !

 
admk

காஞ்சிபுரம் மாவட்டம் காரைப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர்  ஜேக்கப். 62 வயதாகும் இவர் ஒரு ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர். இவர் அரசுப்பணியுடன்  அதிமுகவிலும் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.  இவரது மூத்த மகன் ஆனந்த்  காஞ்சிபுரம் காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில், அதே அலுவலகத்தில் பணிபுரியும்   இடைத்தரகர் அப்புவுக்கும்  ஆனந்த்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஜனவரி 7ம் தேதி  ஆனந்த்துக்கும், அப்புவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு நடந்தது.

அடித்தே கொலை

இதனை கேள்விப்பட்ட இவரது  தந்தை கதறியபடி  சம்பவ இடத்துக்கு விரைந்தார்.  ஆனந்த் அவரிடம் பணியிடத்தில் சின்ன பிரச்சனை நான் பார்த்துப்பேன். நீங்க வீட்டுக்கு போங்க எனக் கூறியுள்ளார்.  இதை கேட்டு வீடுதிரும்பி விட்டார்தனது தந்தையிடம் வேலை விவகாரத்தில் சிறிய பிரச்சனை என்றும் நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் கூறி அனுப்பி வைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு திரும்பததால் அதிர்ச்சியடைந்த தந்தை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  

ஆம்புலன்ஸ்


இந்நிலையில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செட்டியார்பேட்டை பகுதியில் தலை கழுத்து  என  பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வௌ்ளத்தில் சடலமாக கிடப்பதாக ஜேக்கப்புக்கு தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்திற்கு விரைந்த ஜேக்கப் தனது மகன்  ஆனந்த் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து  கதறித் துடித்தார். இது குறித்து காவல் நிலையத்தில்   புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  ஆனந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து  அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.   சந்தேகத்தின் பேரில்  அப்புவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web