அதிமுக நிர்வாகிகள் திமுக எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல்!

 
admk

 

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெறும் ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி, 26-ஆவது ஆண்டாக அன்னதானத்துக்காக டன் கணக்கில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை கடலூரைச் சேர்ந்த இஸ்லாமியர் அனுப்பி வைத்தார். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த சேவை தொடர்ந்து நடைபெற்று வருவது பக்தர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

kadalor

இதற்கிடையே, நெய்வேலி இந்திரா நகர் மாற்றுக்குடியிருப்பைச் சேர்ந்த அமல்ராஜ், திமுக வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர், நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கோரணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், நெய்வேலி சபா. ராஜேந்திரன் எம்எல்ஏ குறித்து பொய்யான தகவல்களை சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் லட்சுமிகாந்தனும், எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ராதாகிருஷ்ணன் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகிய இருவர் மீதும் நெய்வேலி நகர போலீசார் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!