முடிந்தது தொகுதிப் பங்கீடு! அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.-வுக்கு 27; பா.ம.க., அ.ம.மு.க.-வுக்கு எத்தனை? முழு தகவல்கள்!

 
அதிமுக அதிமுக

தமிழக சட்டசபைத் தேர்தல்  ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்   இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது. இதற்காகத் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி   இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியின் முக்கியத் தலைவர்களான டி.டி.வி.தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக வாக்குறுதி தேர்தல்

நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு  27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு (PMK) 18 தொகுதிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்தக் கூட்டணி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், "தமிழகத்தில் இந்த மெகா கூட்டணி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; தேர்தல் களத்தில் அமோக வெற்றி பெறுவோம்" எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தனர். அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் களம் காண்பது, வரும் தேர்தலில் மும்முனைப் போட்டியை இன்னும் அனல் பறக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!