அதிமுக ‘23 பேர்...ஃபர்ஸ்ட் லிஸ்ட்’ ... இபிஎஸ் எடப்பாடியிலேயே போட்டி... !

 
அதிமுக அதிமுக


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது. இதில் 23 முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் வரும் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைப் பங்கீடு செய்துவிட்டு, தனது பலத்தைக் காட்ட இபிஎஸ் முதற்கட்டப் பட்டியலை இறக்கியுள்ளார்.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. ராயபுரத்தில் 8-ஆவது முறையாக டி.ஜெயக்குமார், தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி, மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ எனப் ‘பழைய முகங்களுக்கே’ முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாஜக குறிவைத்த திருப்பரங்குன்றம் தொகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் அதிமுகவே தக்கவைத்துக்கொண்டு, அங்கு வி.வி.ராஜன் செல்லப்பாவை வேட்பாளராக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக

நேற்றுதான் ‘இலவச பிரிட்ஜ், ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்’ என அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிய இபிஎஸ், இன்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுத் தேர்தல் களத்தில் சூறாவளிப் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 எனத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!