அதிமுக 'பிரிட்ஜ்'.. திமுக 'எல்இடி டிவி': தேர்தல் களத்தில் பறக்கும் அதிரடி இலவசங்கள்!

 
admk dmk admk dmk

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது இலவச அறிவிப்புகளால் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் "வீட்டுக்கு வீடு பிரிட்ஜ்" வழங்கப்படும் என அதிரடி வாக்குறுதியை அளித்து வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்த்து வருகிறது. இதற்குப் போட்டியாக ஆளுங்கட்சியான திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக உள்ள திமுக தேர்தல் அறிக்கையில் "வீட்டுக்கு வீடு எல்இடி டிவி" (LED TV) வழங்கும் திட்டம் முக்கிய இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

கடந்த 2006-ல் திமுகவின் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அறிவிப்பும், 2011-ல் அதிமுகவின் மிக்சி, கிரைண்டர் அறிவிப்பும் அந்தந்தக் கட்சிகளின் வெற்றிக்குத் தூணாக இருந்தன. அதே பாணியில் தற்போது 2026 தேர்தலிலும் இலவசப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் எல்இடி டிவி மட்டுமின்றி, திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குறுதியும் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் திமுக

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு, ஏப்ரல் 3-ம் தேதி திருவாரூரில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார். ஒருபுறம் பிரிட்ஜ், மறுபுறம் எல்இடி டிவி எனப் பிரதானக் கட்சிகள் மல்லுக்கட்டுவது வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவசங்களால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரிப்பதாக ஒரு தரப்பினர் கவலை தெரிவித்தாலும், தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்த 'கவர்ச்சிகரமான' அறிவிப்புகளே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!