கலப்பட டீசல் விவகாரம்... கார் உரிமையாளருக்கு ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க பெட்ரோல் பங்க்கிற்கு உத்தரவு !

சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் அஜய் பாஸ்கர். இவர் 2022ம் ஆண்டு சேலம் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-கில் காருக்கு டீசல் நிரப்பியுள்ளார்.
சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென என்ஜீன் பழுதாகி, ரூ 25000 செலவு செய்து காரை சென்னைக்கு கொண்டு வந்து பழுது பார்த்ததாகவும், கலப்பட டீசல் காரணமாக என்ஜின் பழுதாகி இருப்பதால் பழுதை சரிசெய்ய செலவிட்ட 8 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை வழங்கும்படி சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்-க்கு உத்தரவிடக் கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், காரை பழுது பார்ப்பதற்கான செலவு தொகை 8 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் பங்க்-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதவிர இழப்பீடாக ரூ 10000மும் வழக்கு செலவுக்காக ரூ 2000மும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!