1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு?! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

 
அன்பில் மகேஷ் மாணவர்கள்

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா வைரஸ்  அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை காட்டிலும் ஜெட் வேகத்தில் பரவி வருவதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஒரு புறம் 12, 11, 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.  1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை விரைந்து முடித்து விடலாம் என்ற தகவல்கள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகளை  முன்கூட்டியே நடத்தும் திட்டம் குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அத்துடன்  வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 
 

பள்ளிகள்

தமிழகத்தில்  மார்ச் 13ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 3 வரை நடைபெற உள்ளன. அதே நேரத்தில் மார்ச் 14 நேற்று முதல்  11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கி  ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.  அதேபோல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பின்னர் 1 முதல்  9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகளை நடத்தலாம் என பள்ளி தேர்வுகள் இயக்ககம்  திட்டமிட்டிருந்தது. அதாவது, ஏப்ரல் 24-ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. 

அச்சுறுத்தும் ஒமிக்ரான்: மும்பையில் டிசம்பர் 15 வரை பள்ளிகள் அடைப்பு!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா வைரஸ் வெகு தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாடத்திட்டங்கள் இன்னும் நடத்தி முடிக்கப்படாமல் இருப்பதால் இது குறித்து உடனடியாக முடிவு எடுக்க முடியாது. முதல்வர், கல்வி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு எடுக்க முடியும். அதுவரை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web