நெல்லையில் துணிகரம்... ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 2 சவரன் நகை திருட்டு!
நெல்லை: நெல்லை அருகே தூத்துக்குடி - நெல்லை தடத்தில் இயங்கும் தனியார் பேருந்தில், பெண் ஒருவரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் நைசாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்தவர் சந்திரா (57). இவர் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் தினமும் காலையில் பேருந்து மூலம் வேலைக்குச் செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று காலை, சந்திரா தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி வந்த ஒரு தனியார் பேருந்தில் தெய்வச்செயல்புரம் நிறுத்தத்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சந்திரா பேருந்தில் ஏறியபோது, அவருக்கு அருகிலேயே மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திட்டமிட்டபடி, தங்களது சேலை முந்தானையைச் சந்திராவின் மீது எதார்த்தமாகப் போடுவது போலப் பாவனை செய்துள்ளனர்.
சந்திராவின் கவனத்தைத் திசைதிருப்பிய அந்த நேரத்தில், அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை லாவகமாகப் பறித்துள்ளனர். நகை பறிக்கப்பட்டதைச் சந்திரா உணரும் முன்பே, அந்த மூன்று பெண்களும் அடுத்த நிறுத்தமான வல்லநாடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கித் தப்பினர்.

சந்திரா தனது வேலை இடமான சமாதானபுரம் நிறுத்தத்தில் இறங்கியபோதுதான், தனது கழுத்தில் இருந்த நகை மாயமாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அந்த மூன்று பெண்கள்தான் நகையைத் திருடியிருப்பதை அவர் உறுதி செய்தார்.
இது குறித்துச் சந்திரா அளித்த புகாரின் பேரில், நெல்லை மாவட்டப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வல்லநாடு மற்றும் பேருந்து நிறுத்தங்களில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் தொடர் திருட்டுகளில் ஈடுபடும் கும்பல் இதுவாக இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
