மகளிர் உரிமை தொகை !! இன்று ஆலோசனைக் கூட்டம்!!

 
மகளிர் உரிமை தொகை

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த தினம் முதல் மாதம் ரூ1000 திட்டம் அமல்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்  மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் நடைமுறைகள் குறித்து முதல்வர்   ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.  

இல்லத்தரசிகள்

அதன்படி இன்று காலை 10.30 மணி முதல் சென்னை தலைமை செயலகத்தில்  அமைச்சர்களுடன் முதல்வர்  ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்க இருக்கும்  நிலையில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகரிகளுடன் நடத்தப்படும் ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் நிலவி வருகிறது

இல்லத்தரசிகள்

மார்ச் மாதம் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியான  நிலையில்,   மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.  இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ரூ7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தகுதியானவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய ஆலோசனைபெரும் எதிர்ப்பார்ப்புக்களை இல்லத்தரசிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web