பெற்ற மகனே தாயை எரித்துக் கொலை செய்த கொடூரம்!! அதிர்ச்சி வாக்குமூலம்!!

 
லதா

புதுச்சேரி வில்லியனூர் ஆண்டியார்பாளையத்தில் வசித்து வருபவர் 60 வயதான  தட்சிணா மூர்த்தி. இவர்  கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி 55 வயது  லதா . இவர்களின்  இளைய மகன்  24 வயது புகழ்மணி . இவர், முத்திரையர்பாளையம் தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். புகழ்மணி, கஞ்சா போதைக்கு அடிமையானார். அதில் இருந்து மீள அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில தினங்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை.

லதா

இந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியே சென்றுவீட்டு இரவில் வீடு திரும்பிய புகழ்மணி தனது தாயிடம் சாப்பாடு கேட்டுதகராறில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த புகழ்மணி, அருகில் இருந்த கட்டையால் தாக்கியதில் லதா அதே இடத்தில் இறந்தார். உடன் புகழ்மணி, அவர் மீது தலையணையை போட்டு அதில் சமையல் எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனை பார்த்த தட்சிணா மூர்த்தி தீயை அணைக்க முயன்றுகாயமடைந்தார். ஏற்கனவே லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின்பேரில், அங்கு சென்ற போலீசார் தீ காயங்களுடன் லதா இறந்த நிலையிலும், தட்சிணாமூர்த்தி தீ காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதையும் பார்த்தனர்.

லதா

பின்னர் உடனடியாக தட்சிணாமூர்த்தியை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடத்தும் மங்கலம் போலீசார் புகழ்மணியை கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web