திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்... ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் ... 400 பேர் உடல் கருகி பலி!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட 'ஓமித்' போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட கொடூர வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலைப் பாகிஸ்தான் விமானப்படை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. புனிதமான ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்குவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், தலைநகர் காபூலில் நடத்தப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த வான்வழித் தாக்குதல் குறித்து சர்வதேச அமைப்புகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
