10 மகள்களுக்கு பின் 11-வது பிரசவத்தில் ஆண் குழந்தை… ஹரியாணாவில் ஆச்சரிய குடும்பம்!

 
தில்குஷ்
 

ஹரியாணா மாநிலத்தில் 10 மகள்களை பெற்ற தம்பதிக்கு, 11-வது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஹிந்த் மாவட்டம் உசானா பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி சஞ்சய் குமார் – அவரது மனைவி தம்பதி, கடந்த 19 ஆண்டுகளில் 11 குழந்தைகளை பெற்றுள்ளனர். 37 வயதான பெண் கடந்த 4-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான பிரசவத்திற்குப் பிறகு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தில்குஷ்

10 மகள்களின் பெயர்களையே தந்தை சரியாக நினைவுகூர முடியாமல் தவித்தது வேடிக்கையாக மாறியது. மேலும், 7-வது மற்றும் 10-வது மகள்களுக்கு ‘லட்சுமி’ என்ற ஒரே பெயரை வைத்திருப்பதும் பலரை ஆச்சரியப்பட வைத்தது. மூத்த மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மற்ற மகள்களும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

“மகள்களுக்கு ஒரு சகோதரன் வேண்டும் என்பதே ஆசை. ஆணாதிக்க எண்ணம் இல்லை. பெண்களும் எல்லாத் துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்” என்று தந்தை சஞ்சய் குமார் தெரிவித்தார். கடினமான பிரசவத்தில் 4 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில், சகோதரிகள் அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ‘தில்குஷ்’ என பெயரிட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!