18 வருடங்களுக்குப் பின் மீண்டும் டபுள் டக்கர்... சென்னையில் வலம் வரும் 'இரட்டைத் தள' ராணி... எந்தெந்த வழித்தடத்தில்? எப்படி முன்பதிவு?

 
டபுள் டக்கர்

சென்னையின் அடையாளமாகத் திகழ்ந்த டபுள் டக்கர் பேருந்துகள், சுமார் 18 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிங்காரச் சென்னையின் சாலைகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன. 90-களில் பிறந்தவர்களின் 'மலரும் நினைவுகளை' மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பேருந்தில் பயணிக்க எப்படி முன்பதிவு செய்வது? எந்த வழித்தடத்தில் என்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக 1970-களில் வலம் வந்த டபுள் டக்கர் பேருந்துகள், இன்று போகிப் பண்டிகை தினத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் களமிறங்கியுள்ளன. 1970 முதல் 2008 வரை தாம்பரம் - பாரிமுனை இடையே இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேம்பாலப் பணிகள் மற்றும் உயரக் கட்டுப்பாடுகள் காரணமாக இவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது நவீன வசதிகளுடன் மீண்டும் அறிமுகமாகியுள்ளன.

டபுள் டக்கர்

சுமார் ₹1.86 கோடி மதிப்புள்ள இந்த அதிநவீன மின்சார குளிர்சாதன டபுள் டக்கர் பேருந்தை, அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனம் இணைந்து தமிழக அரசிற்குப் பரிசாக வழங்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அரசு காப்பக மாணவர்கள் இதில் ஏறிச் சென்னையை ரசித்தனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த 'ஹெரிடேஜ்' பேருந்து இயக்கப்பட உள்ளது: சென்னை நகருக்குள்: எல்.ஐ.சி (LIC), ஸ்பென்சர் பிளாசா, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், பாரிமுனை, தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம். கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை இந்தப் பேருந்தை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

டபுள் டக்கர்

தற்போது சென்னை தீவுத்திடலில் (Island Grounds) இந்தப் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, பொதுமக்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளும், பொதுமக்களுக்குக் குறிப்பிட்ட கட்டணமும் நிர்ணயிக்கப்பட உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!