248 ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ யோகம்... கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்!
நவகிரகங்களில் 'புத்தி காரகன்' என்று அழைக்கப்படும் புதன் பகவான், டிசம்பர் 29-ம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 30-ம் தேதி, புதனும் யமனும் இணைந்த தசாங்க யோகம் (36 டிகிரி இடைவெளியில்) உருவாகிறது. சுமார் 248 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் இந்த மாற்றத்தால் 3 ராசிகாரர்களுக்குப் பணமழை பொழியப் போகிறது.

1. மிதுனம் - முன்னேற்றத்தின் உச்சம்
புதனின் சொந்த ராசியான மிதுனத்திற்கு இது பொற்காலம். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கதவைத் தட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் பெரிய சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்குச் சாதகமான சூழல் அமையும்.
2. தனுசு - வெற்றியின் தொடக்கம்
புதன் உங்கள் ராசிக்குள்ளேயே வருவதால் உங்கள் ஆளுமைத் திறன் பளிச்சிடும். நிலுவையில் இருந்த பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். பரம்பரைச் சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். தயக்கமின்றி எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும்.

3. கும்பம் - கடன் இல்லா வாழ்க்கை
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பெரும் நிம்மதியைத் தரும். தேவையற்ற செலவுகள் குறைந்து, முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கிட்டும். நீண்ட நாள் தொல்லை கொடுத்து வந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் நீண்ட கால ஆசைகள் மற்றும் இலக்குகளை மிக எளிதாக அடைவீர்கள்.
புதன் தனுசு ராசிக்குள் பிரவேசிப்பது (டிசம்பர் 29) மற்றும் தசாங்க யோகம் உருவாவது ஜோதிட ரீதியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 248 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற கிரக சேர்க்கை அமைவது அரிதானது. கோச்சார ரீதியான இந்த பலன்கள் அந்தந்த ராசிக்காரர்களின் தசா புக்தியைப் பொறுத்து மாறுபடலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
