53 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கி மனிதர்கள்... ஆர்டெமிஸ்–2 ஏவுதலுக்கு நாசா தயார்!

 
nasa
 

நாசாவின் அறிவிப்புப்படி, பிப்.6-ம் தேதி நான்கு விண்வெளி வீரர்களுடன் ஆர்டெமிஸ்–2 விண்கலம் விண்ணில் பாய்கிறது. 1972-ல் அப்பல்லோ திட்டம் முடிந்த பிறகு, நிலவை நோக்கிச் செல்லும் முதல் மனிதப் பயணம் இதுவாகும். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை ஏவுதலுக்கான ‘லான்ச் விண்டோ’ திறந்திருக்கும் நிலையில், வானிலை காரணமாக மாற்றம் ஏற்பட்டால் பிப்.7, 8, 10 மற்றும் 11 தேதிகள் மாற்றுத் தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Preprations continue for the Artemis 2 mission at Kennedy Space Center in Florida, US. (Photo: Reuters)

இந்த 10 நாள் பயணத்தில் நாசாவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகமையின் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விண்கலம் நிலவில் தரையிறங்காது. நிலவுக்கு மிக அருகில் சென்று ‘ஃப்ளைபை’ மேற்கொண்டு, அதன் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து ஓரியன் விண்கலம் ஏவப்படுகிறது.

இதற்கிடையே, ஆர்டெமிஸ்–2 விண்கலத்தின் கவுன்ட் டவுன் ஒத்திகையை நாசா தொடங்கியுள்ளது. இரண்டு நாள் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட சோதனைகள் மூலம் ராக்கெட் மற்றும் விண்கலம் மனிதர்களை சுமந்து செல்ல பாதுகாப்பானதா என்பதைக் கண்காணிக்கப்படுகிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், 53 ஆண்டுகளுக்குப் பின் மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி ஆழமான விண்வெளிக்குச் செல்லும் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!