ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரான்ஸிலும் 15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்கள் தடை!

 
பிரான்ஸ் சமூகவலைத்தளம்

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் Snapchat, Instagram, TikTok போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது சட்டப்படித் தடை செய்யப்படுகிறது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இந்த மசோதா 116-23 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

வரும் செப்டம்பர் 2026 (புதிய கல்வி ஆண்டு தொடக்கம்) முதல் புதிய கணக்குகளுக்கு இந்தத் தடை அமலாகும். ஏற்கனவே உள்ள கணக்குகள் ஆண்டின் இறுதிக்குள் நீக்கப்பட வேண்டும்.  15 முதல் 18 வயது வரையிலான இளம் பருவத்தினர், பெற்றோரின் நேரடி அங்கீகாரத்துடன் மட்டுமே சில குறிப்பிட்ட தளங்களை அணுக முடியும்.

சமூக வலைதளங்கள்

ஏற்கனவே ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள செல்போன் தடை, இனி உயர்தரப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த விதிகளை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பல கோடி யூரோக்கள் வரை அபராதம் விதிக்கச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

"குழந்தைகளின் மூளை விற்பனைக்கு அல்ல": "எமது குழந்தைகளின் மூளை லாப நோக்கம் கொண்ட நிறுவனங்களின் கையில் சிக்கிச் சீரழிய அனுமதிக்க முடியாது" என அதிபர் மேக்ரான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களின் 'அல்காரிதம்' (Algorithms) மூலம் சிறுவர்கள் திசைதிருப்பப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்கள்

கடந்த டிசம்பர் 2025-ல் அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்டோருக்கு இதேபோன்ற தடையைக் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் தற்போது இத்தகைய கடுமையான சட்டத்தை இயற்றிய இரண்டாவது நாடாக மாறியுள்ளது.

பிரான்ஸைத் தொடர்ந்து டென்மார்க், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் 2026-ம் ஆண்டிற்குள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டுவரத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. வயது சரிபார்ப்பு (Age Verification): இந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சவால் 'வயது சரிபார்ப்பு' முறைதான். இதற்காக டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது அதிநவீன மென்பொருட்களைப் பயன்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!