ஹால் டிக்கெட் வாங்கிய பின் 13வது மாடியிலிருந்து +2 மாணவி குதித்து தற்கொலை!

 
தாரணி

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் மாநகராட்சி ஊழியராக மோகன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தாரணி (17), அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். 

தற்போது பிளஸ்2 பொதுத்தேர்வு காலம் என்பதால் அவர் சுறுசுறுப்பாக படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பள்ளியில் பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற்று கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் இரவு 9 மணியளவில் 13வது மாடியில் இருந்து மாணவி தாரணி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

தாரணி

இதனால் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் பெரும் அதிர்சசி அடைந்தனர். பெற்றோர் கதறி அழுதபடி விரைந்தோடினர். மாடியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை, அங்கிருந்தவர்கள் மீட்டு கங்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தாரணி

அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web