"சிபிஐ, அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சென்சார் போர்டும் பாஜகவின் கைக்கூலி!" - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
சிபிஐ, அமலாக்கத்துறையைத் தொடர்ந்து மத்திய தணிக்கை வாரியம் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், விஜய்யின் படத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகச் சித்தரித்துள்ளார்.
"சிபிஐ (CBI), அமலாக்கத்துறை (ED), வருமான வரித்துறை (IT) ஆகியவற்றைத் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்கப் பயன்படுத்தி வரும் பாஜக அரசு, இப்போது சென்சார் போர்டையும் தனது புதிய ஆயுதமாக மாற்றியுள்ளது" என முதல்வர் சாடியுள்ளார்.
#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!#CBFC
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 9, 2026
ஒரு கலைஞனின் படைப்புச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் தணிக்கை வாரியம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், இது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "மத்திய தணிக்கை வாரியத்தின் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள், 'ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்கத் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். படத்தின் 29 வெட்டுக்களுடன் (Cuts) வெளியிட அனுமதி அளித்தார். இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மற்றும் மத்திய அரசு தரப்பில் மதியம் அவசர மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிமன்றத் தடையால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (ஜனவரி 9) வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' திரைப்படம், ஜனவரி 21 வரை வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
