சினிமா பிரியர்கள் அதிர்ச்சி... உதயம் தியேட்டரை அடுத்து சென்னையில் மேலும் ஒரு திரையரங்கம் மூடல்!

 
பிருந்தா தியேட்டர்


சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான  அசோக் பில்லர்  உதயம் தியேட்டர் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற திரையரங்கமான ஸ்ரீ பிருந்தா தியேட்டரும் மூடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

உதயம் திரையரங்கம்


வடசென்னை மக்களுக்காக கடந்த 1985ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த தியேட்டர் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை திரையிட்டு வந்தது. வட சென்னையில் திறக்கப்பட்ட முதல் ஏசி தியேட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தியேட்டரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் திறந்து வைத்ததாக வரலாறு.  இந்த தியேட்டரை பிருந்தா திரையரங்கம் என அழைப்பதைவிட ரஜினி தியேட்டர் என்று தான் அழைக்கின்றனர்.

உதயம்

இங்கு ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அதிகபட்சமாக 200 நாட்கள் ஓடி இருக்கிறது. இதுதவிர ரஜினியின் பாண்டியன், அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிவிழா கண்டுள்ளன.  உதய கீதம் படத்தின் மூலம் 1985ல் செயல்படத்தொடங்கிய  இந்த தியேட்டரில் கடைசியாக டிராகன் படம் திரையிடப்பட்டது. கடந்த திங்கட்கிழமை இரவு இந்த தியேட்டரில் கடைசி காட்சி திரையிடப்பட்டது. சினிமா ரசிகர்கள் இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web