தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி எம்.பி. பதவியேற்பு!
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் உள்ள வக்ஃப் வாரியத் தலைமை அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. ஏற்கெனவே வக்ஃப் வாரியத் தலைவராகப் பணியாற்றி வந்த நவாஸ்கனி எம்.பி., தற்போது மீண்டும் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

தலைவருடன் சேர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்களான பி. அப்துல் சமது எம்.எல்.ஏ., குலாம் முஹம்மது மெஹ்தி கான், ஏ. மஹரிபா பர்வீன், ஏ.எஸ். பாத்திமா முஜப்பர், எம். முஹம்மது பஷீர், எஸ்.கே. நவாஸ் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைச் செயலாளர் இ. சரவணவேல்ராஜ் மற்றும் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் அஃப்தாப் ரசூல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
