மீண்டும் கமலா ஹாரிஸ்... கலிபோர்னியா மாகாண கவர்னர் தேர்தல் !

 
#BIG NEWS: அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ்!! அந்த 1 மணி 25 நிமிஷங்களும் செம கெத்து!!


அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் . சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பிடம் தோல்வியடைந்த நிலையில், வாஷிங்டனில் இருந்து கலிபோர்னியா மாகாணத்திற்கு திரும்பியுள்ளார். இங்கு உருவான  காட்டுத்தீக்கு எதிரான தீயணைப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில்  அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார்.  

கமலா ஹாரிஸ்

கலிபோர்னியாவில் கவர்னர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், தேர்தலில் களமிறங்க விரும்பும் கட்சியின் இதர தலைவர்கள் அதிலிருந்து பின்வாங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து கமலா ஹாரிஸ், "நான் இங்கேதான் இருக்கிறேன், நான் எந்தப் பதவியை வகித்தாலும் இங்கேயே இருப்பேன். ஏனென்றால் அதுதான் சரியான செயல்” எனக் கூறியுள்ளார்.  

கமலா ஹாரிஸ் - டிரம்ப்

அமெரிக்காவின் துணை அதிபராக நான்கு ஆண்டுகள் பணியாற்றி, அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருந்த ஒருவருக்கு ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவது என்பது தகுதி குறைவு என தவறாகக் கருதப்படுகிறது. இருந்தாலும்  கமலா அவ்வாறு செய்வதன் மூலம், சக ஜனநாயகக் கட்சியினரின் உதவியுடன் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தை வழிநடத்த வலுவான வாய்ப்பைப் பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதிபர், துணை அதிபர், செனட்டர் மற்றும் அட்டர்னி ஜெனரல் என அனைத்துப் பதவிகளுக்காகவும் தேர்தல் வேட்பாளராக கலிபோர்னியாவில் நின்று ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web