அதிர்ச்சி... பேஸ்புக் : மீண்டும் 10,000 பேரை பணி நீக்கம் செய்தது மெட்டா நிறுவனம்.. கதறும் ஊழியர்கள்!

 
ஆட்குறைப்பு

கொரோனா பெருந்தொற்றின் பின்விளைவுகள், ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம், உலக அளவில் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச அளிவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர் என உலகின் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பெரும்பாலானா டெக் மற்றும் டெக் சார்ந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன.

முதலில் இந்த நடவடிக்கையை எடுத்தது டிவிட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க்தான். இவர் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும், உலகம் முழுவதும் டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினர் பணிநீக்கம் செய்துள்ளார். 

ஆட்குறைப்பு

இவரை பின்பற்றியுள்ள ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும், பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், வருமானம் குறைந்து வருவதைக் காரணம் காட்டியும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில், இரண்டாவது முறையாக 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் செய்ய போவதாக மெட்டா நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் தற்போது நிரப்ப போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. 

ஆட்குறைப்பு

இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைப்படுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web