அக்னிவீர் திட்டத்தில் சென்னை உட்பட 11 மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு!

 
அக்னிவீர்

இந்திய ராணுவத்தில்  அக்னிவீர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2022 முதல் அக்னிபாத் திட்டத்தின்  கீழ் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. பொதுப்பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர், ஆயுதப்பிரிவு, பெண் ராணுவ காவல், பார்மா உட்பட  பல பிரிவுகளில் தேர்வு நடக்கிறது.

அக்னிவீர்

அக்னிவீர் (ஜெனரல் டூட்டி) பணிக்கு 10ஆம் வகுப்பு 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். டிரைவர் பணிக்கு எல்.எம்.வி லைசன்ஸ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொழில்நுட்ப பிரிவுக்கு 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் இயற்பியல், கணிதம், ஆங்கிலம் பாடங்களுடன் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தேர்வானவர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்கள்.

அக்னிவீர்

மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டுகள் முடிவில் 25% பேர் வரை நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு சுமார் ரூ.10 லட்சம் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 6 மாதம் பயிற்சி, 3½ ஆண்டு பணி என திட்டம் அமையும். 2027க்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க ஏப்ரல் 1 கடைசி நாள். ஜூன் மாதம் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!