பெரும் சோகம்... நேரலையில் விவசாய நிபுணர் மயங்கி சரிந்து பலி.. தொடரும் திடீர் மரணங்கள்... !
நேற்று ஜனவரி 12ம் தேதி வெள்ளிக்கிழமை சேனலின் ஸ்டுடியோவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட நேரலை நிகழ்ச்சியில் விவசாய நிபுணர் அனி எஸ் தாஸ் மயங்கி சரிந்தார் . இதனால் சேனல் வளாகம் பெரும் பரபரப்புக்குள்ளானது. கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் திட்டமிடல் இயக்குநராக இருந்தவர்
டாக்டர் அனி எஸ் தாஸ். 59 வயதாகும் அனி தூர்தர்ஷனி நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அதில் நேற்று நேரலை விவாதத்தின் போது சுருண்டு விழுந்து உயிரிழந்தார் என்ற சோகமான தகவல்கள் பரவியுள்ளன. இன்று மாலை 6.30க்கு தூர்தர்ஷனின் கிருஷி தர்ஷன் நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சேனல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மயங்கி சரிந்ததும் அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!