“பளார்...” காதலியின் இடுப்பில் கை வைத்த சீண்டிய இளைஞர்.. அடுத்து நடந்த சம்பவம்!

 
இடுப்பு

சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றினுள் தனது காதலியுடன் இளைஞர் ஒருவர் சென்றிருந்த நிலையில், அடுத்தடுத்து கடைக்குள் நுழைந்த இளைஞர் கும்பலில் ஒரு குறும்புக்கார இளைஞர், இளம்பெண்ணின் இடுப்பில் கை வைத்து பாலியல் தொந்தரவு தருகிறார். அந்த வீடியோவில், நடந்ததை யூகித்த காதலன், இளம்பெண்ணிடம் உறுதிப்படுத்திக் கொண்டு பாலியல் குறும்பில் ஈடுபட்ட இளைஞரை அடித்து வெளுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

தினந்தோறும் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பல்வேறு விதமான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இவற்றில் சில வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதாவது ஒரு சில்லறை விற்பனை கடையில் காதல் ஜோடி ஒன்று நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 4 நபர்கள் கடையின் உரிமையாளரிடம் மிகவும் பழக்கம் உள்ளவர்கள் போன்று கை அசைத்துக் கொண்டே உள்ளே வந்தனர். அந்த இளைஞர்களில் ஒருவர் நின்று கொண்டிருந்த பெண்ணின் இடுப்பில் தொட முயற்சித்தார். உடனே  அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தன் காதலரிடம் இது குறித்து புகார் அளித்த நிலையில்  அந்த  காதலர் அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்துவிட்டார்.  

காதல்

அந்த சத்தம் கடை முழுவதும் எதிரொலித்த நிலையில் அருகில் இருந்த நண்பர்கள் செய்வதறியாமல்  அதிர்ச்சியில் நின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அதில் ஒருவர் “நீதியின் அறை” எனவும் மற்றொருவர்   “இதுதான் உண்மையான காதல் பாதுகாப்பு” எனவும் பதிவிட்டுள்ளனர்.  இச்சம்பவம்  பெண்கள் மீதான தவறான செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது தைரியமாக எதிர்க்கும் காதலரின் செயல் சமுதாயத்தில் நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web