அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட சதி? பிளாக் பாக்ஸ் ரெக்கார்டிங்கில் அதிர்ச்சி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து ஜூன் 12ம் தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரகமாகும் இந்த விமானத்தில், 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 242 பேர் இருந்தனர்.
இந்த விமான விபத்தில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உதவும் முக்கிய கருவியாக கருப்புப் பெட்டி தேடப்பட்டு வந்தது. அதன் பின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சிலரின் திட்டமிட்ட நாச வேலை காரணமாக ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த தகவலை மத்திய அமைச்சர் முரளிதர் மோஹூல் தெரிவித்துள்ளார். ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பிளாக் பாக்ஸில் இருந்து கிடைத்த ரெக்கார்டிங் அடிப்படையில் பல கோணங்களிலும் பல்வேறு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!