‘காவாலா’ வுக்கு கலக்கல் ஆட்டம் போடும் AI சிம்ரன், காஜல் !!

 
ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படம்  ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை தமன்னா, நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன்  என முண்ணனி நட்சத்திரங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.  



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும்  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியனாக நடித்து வருகிறார்.  அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடல்  ஜூலை6ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளது.


 இந்த பாடலில் கேமியோவில் ரஜினிகாந்த் தோன்றியுள்ள நிலையில், தமன்னா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடல் மற்றும் தமன்னாவின் நடனம் இணையத்தில் வைப் ஆகி வரும் நிலையில், இந்த பாடல் குழந்தைகள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் செந்தில் நாயகம் என்ற செயற்கை நுண்ணறிவு என்ஜினியர் தமன்னா பாட்டியாவின் நடனத்தை பல்வேறு நடிகைகளும் ஆடும் ஸ்டைலுக்கு மாற்றி அமைத்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது செந்தில் நாயகத்தின் ட்விட்டர் பக்கத்தில், சிம்ரன், ஹன்சிகா, நயன்தாரா, மாளவிகா, கத்ரீனா கைப், கெய்ரா அத்வானி, மற்றும் காஜல் அகர்வால்  ஆடும் ரீல்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web