அதிமுக - பாஜக. கூட்டணி குறித்த கேள்வியே கேட்காதீங்க... நயினார் நாகேந்திரன்!

 
நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக. கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம்.  திமுக ஆட்சி விரட்டப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.  

 நயினார் நாகேந்திரன்

இன்று காலை தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம். அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி என்ன பேசிக் கொள்கிறார்களோ, என்ன முடிவு எடுக்கிறார்களோ அது நடக்கும். 

தேவையில்லாமல் உங்கள் சந்தேகங்களை கிளப்பி பிளவுபடுத்தும் முயற்சியை கை விட்டுவிடுங்கள். என்னுடைய விருப்பம் திமுக ஆட்சி விரட்டப்பட வேண்டும் என்பதுதான். திமுக ஆட்சியே மக்கள் விரோத ஆட்சியாகவே நான் கருதுகிறேன். 

நயினார் நாகேந்திரன்

ஆகவே தமிழக மக்கள் நலன் கருதி மது, போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும், சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வை கட்டுப்படுத்தவும் மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைக்காக எல்லோரும் வரவேண்டும்” என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web