சட்டசபையில் அமளி... அதிமுக பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து வெளிநடப்பு!

தமிழ்நாட்டின் 2025-2026 ஆண்டுக்கான பொதுபட்ஜெட் உரையை நிதியமைச்சர் தற்போது தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தொடங்கிய உடனே அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டு பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழ்நாடு இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதல்வரை நாடே பாராட்டிக் கொண்டு இருக்கிறது என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதை ஒட்டி, பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
இன்னும் சற்று நேர்த்தில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பின் திமுக எம்.எல்.ஏ சந்திரகுமார் சட்டப்பேரவையில் பங்கேற்க முதல்முறையாக வருகை தந்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!