அதிமுக வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைப்பு... என்ன காரணம்? - தலைமை கழகம் அறிவிப்பு!

 
இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், விருப்ப மனு அளித்தவர்கள் குழப்பத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் ஜனவரி 9-ம் தேதி முதல் நேர்காணல் தொடங்குகிறது. இதில் குறிப்பிட்ட இரு தேதிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி

ஜனவரி 11-ல் நடக்கவிருந்த நேர்காணல் அதற்கு அடுத்த நாளான ஜனவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12-ல் நடக்கவிருந்த நேர்காணல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் (ஜனவரி 9, 10 மற்றும் 13) ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான நேர்காணல் எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேதிகள் மாற்றம் குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களுக்காகவே இந்த ஒத்திவைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகை மற்றும் கட்சிப் பணிகள் காரணமாக இந்த கால இடைவெளி வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விருப்ப மனு அளித்தவர்கள் நேர்காணலுக்கு வரும்போது, தாங்கள் பணம் செலுத்தியதற்கான அசல் ரசீதை கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும். அதேபோல், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மனுதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாற்று நபர்களை அனுப்பி வைக்கக் கூடாது என்றும் கட்சித் தலைமை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காணும் இந்த நேர்காணல், அதிமுக அரசியல் நகர்வுகளில் மிக முக்கியக் கட்டமாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!