அதிமுக வேட்பாளர் நேர்காணல் ஜனவரி 9ல் தொடக்கம்! - முழு விவரம்

 
இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல், வரும் ஜனவரி 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜனவரி 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் இந்த நேர்காணலை நடத்துகின்றனர்.

ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை காலை வேளையில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கும், மாலை வேளையில் ஈரோடு, கரூர், திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறும்.

ஜனவரி 10 (சனி): கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் (கிழக்கு) ஆகிய மாவட்டங்களுக்குக் காலையிலும்; திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மாலையிலும் நடைபெறும்.

எடப்பாடி பழனிசாமி

ஜனவரி 11 (ஞாயிறு): விருதுநகர் (மேற்கு), கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருச்சி (வடக்கு) மாவட்டங்களுக்குக் காலையிலும்; திருச்சி (தெற்கு), பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு மாலையிலும் நடைபெறும்.

ஜனவரி 12 (திங்கள்): விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்குக் காலையிலும்; வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மாலையிலும் நடைபெறும்.

ஜனவரி 13 (செவ்வாய்): திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் தென்சென்னை மாவட்டங்களுக்குக் காலையிலும்; புதுச்சேரி, கேரளா, சென்னை புறநகர் மற்றும் வடசென்னை மாவட்டங்களுக்கு மாலையிலும் நேர்காணல் நடைபெறும்.

எடப்பாடி

நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள்:

விருப்ப மனு அளித்தவர்கள் மட்டுமே நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குப் பதிலாகப் பிரதிநிதிகள் எவரையும் அனுமதிக்க முடியாது என்று கட்சித் தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நேர்காணலுக்கு வரும்போது விருப்ப மனு அளித்ததற்கான அசல் ரசீதை கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் தொகுதியின் நிலவரம், வெற்றி வாய்ப்பு மற்றும் களப்பணிகள் குறித்த முழுமையான விவரங்களுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தும் நோக்கில், இந்த நேர்காணல் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!