ஜூன் 27, 28 தேதிகளில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

 
இபிஎஸ்

 
அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்  ஜூன் 27, 28  தேதிகளில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  அறிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  ” அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் ஆணைப்படி  அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் ஜூன் 27ம் தேதி   வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஜூன் 28ம் தேதி   சனிக்கிழமை காலை 10 மணிக்கு  தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

அதிமுக மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து மரணம்… இபிஎஸ் உருக்கமாக இரங்கல் பதிவு!  
இந்தக் கூட்டங்களில், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் வரும் பேரவை பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும் கருத்துப் பரிமாற்றமும் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாள்களில் தவறாமல் கலந்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது