அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வாசு த.வெ.க.வில் இணைவு!

 
vijay
 

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியை சேர்ந்த எல்.கே.எம்.பி.வாசு, அ.தி.மு.க. முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளராக இருந்தவர். 1991-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளராகவும், 1996-ம் ஆண்டு வேலூர் நகரசபை அ.தி.மு.க. குழு தலைவராகவும் பணியாற்றினார். கட்சியில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்.

2006 முதல் 2010 வரை வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தார். அந்த காலத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பல சட்டமன்ற தொகுதிகள் கிழக்கு மாவட்டத்தில் இருந்தன. 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்த நிலையில், எல்.கே.எம்.பி.வாசு சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். அப்போது விஜய்க்கு எம்.ஜி.ஆர். புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் த.வெ.க. வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் உடன் இருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!