திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை... அதிமுக நிர்வாகி அதிரடி கைது!
சேலம் ஆத்தூர் அருகே நடந்த சம்பவம் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரசிங்கபுரம் கண்ணாடிமில் பகுதியைச் சேர்ந்த சேகோ சங்கர் (38) அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளராக இருந்தவர். திருமண மண்டபத்தில் தூய்மை பணியில் இருந்த மூன்று குழந்தைகளின் தாயான 31 வயது இளம்பெண் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த சேகோ சங்கர் அவரை வழிமறித்து சிறிது நேரம் அழைப்பதாகவும் மாதம் ரூ.10 ஆயிரம் தருவதாகவும் கூறி அத்துமீறி அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிர்ச்சி அடைந்த பெண் உடனே உறவினருக்கு தகவல் தெரிவித்ததால் சேகோ சங்கர் அங்கிருந்து தப்பியோடினார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து போலீசார் சேகோ சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் தலைமறைவாக இருந்த நிலையிலும் அதிகாலை காவல் நிலையம் அருகிலிருந்த வீட்டில் மறைந்திருந்த தகவல் கிடைத்ததும், எஸ்.ஐ சிவசக்தி தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் அவரை கைது செய்தனர். தற்போது போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்மீது ஏற்கனவே அடிதடி வழக்கும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்ததால், சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், ஆத்தூர் மக்களிடையேவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சேகோ சங்கருக்கு அடுத்தடுத்த நடவடிக்கை என்ன என்பதைக் கவனித்து வருகின்றனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
