டிசம்பர் 10ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!
சென்னையில் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலியுறுத்தி, கட்சியினர் ஆவடி காவல் ஆணையருக்கு விரிவான மனுவை சமர்ப்பித்துள்ளனர். வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ளதால், பெரும் அளவில் தலைமைக்குழு உறுப்பினர்கள் கூட உள்ளனர்.

கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் அறிவிப்பின் பேரில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார் அவைத் தலைவர் தமிழ்மகன் ஹுசேன். கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் முன்கூட்டியே பாதுகாப்பு படையினர் நியமிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

கட்சி முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட வாய்ப்புள்ள இந்த கூட்டத்திற்காக, காவல்துறை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
