அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து.. எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு!

 
இபிஎஸ்

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எடப்பாடி

ஆனால், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுக்குழுவின் தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி நீதிமன்றத்தில் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்ததைத் தொடர்ந்து, அன்று மாலையே அவர் கட்சியின் 7வது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.

அதிமுக

இந்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற ஏப்ரல் 7ம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வரும் 7ம் தேதி நடைபெற இருந்த செயற்குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க. தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web