அதிமுக நிர்வாகி கொலை… மனைவி திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி!
மதுரை சிலைமான் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை துணை செயலாளர் தனசேகரபாண்டியன் என்ற செந்தில் (36) கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஊராட்சி துணைத் தலைவராகவும் இருந்த அவர் சாமநத்தம்-நெடுங்குளம் சாலையில் டீக்கடை நடத்தி வந்தார். நேற்று அதிகாலை கடையை திறக்க சென்றபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவலறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீஸ் விசாரணையில், செந்திலின் மனைவி காவ்யாவுக்கு வில்லாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதை செந்தில் எதிர்த்ததால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி காவ்யாவை கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக காவ்யா, கார்த்திக் உள்ளிட்டோருடன் சேர்ந்து கொலை திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி அதிகாலை கடைக்கு சென்ற செந்திலை தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காவ்யா, கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து விமர்சனம் செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
