அதிமுக சார்பில் போட்டியிட 10,175 மனுக்கள்.. எடப்பாடி பழனிச்சாமிக்காக மட்டும் 2,187 மனுக்கள் குவிந்தன!

 
எடப்பாடி

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கோரி மொத்தம் 10,175 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை (இரு கட்டங்களாக) இந்த மனுக்கள் பெறப்பட்டன. 

எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, "எங்கள் தொகுதியில் வந்து போட்டியிட வேண்டும்" என்று அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் மட்டும் 2,187 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது கட்சிக்குள் அவருக்கு இருக்கும் ஏகோபித்த ஆதரவை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வேண்டி கழக உடன்பிறப்புகள் 7,988 மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். மேற்கண்ட இரு பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் அதிமுக தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

இந்த விருப்ப மனுக்கள் பெறும் பணி, 'புரட்சித் தமிழர்' எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி டிசம்பர் 15 முதல் 23 வரையிலும், மீண்டும் டிசம்பர் 28 முதல் 31 வரையிலும் நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ள அதிமுக, விருப்ப மனுக்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

பெறப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களைத் தொகுதி வாரியாகப் பிரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் தலைமையிலான தேர்வுக் குழுவினர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் (Interview) நடத்துவார்கள். அதன் பின்னரே வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!